பாகிஸ் தானில் மிருக சாலையில் சிங்கத்துக்கு உணவு கொடுக்க சென்ற நபரின் கையை சிங்கம் கவ்விய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்தா சாப்பிடு..! ஆசையாக உணவு கொடுத்த நபர்! அப்படியே கையை கவ்விய சிங்கம்! வைரல் வீடியோ உள்ளே!

பாகிஸ் தான் நாட்டில் உள்ள கராச்சி மிருக சாலையில் அங்குள்ள மிருகங்களுக்கு உணவு வழங்கும் வேலை பார்த்து வந்தவர் கண்ணு பிராடிட்டா. அவர் வழக்கம் போல சம்பவத்தின் அன்று சிஙக்த்திற்க்கு இறைச்சியை கொடுக்க சென்றுள்ளார். கூண்டு கம்பிகளுக்கு இடையில் கையால் உணவு கொடுத்து வந்தவர்.
திடீரென்று யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில், கண்ணு வின் கையை சிங்கம் அழுத்தமாக கவ்வியது, வலியால் கண்ணு அலறி துடிக்க ஆரம்பித்தார். ஆனால் அருகில் இருந்த நபர் கண்ணுவை சிங்கத்திடம் இருந்து மீட்க உதவி செய்யாமல் கத்தி கூச்சலிட்டபடி தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.
நீண்ட போரட்டத்திற்க்கு பிறகு தானாக சுதாரித்து கொண்டு மீண்ட கண்ணு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் அவர் உடல் நிலை நல்லபடியாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
மேலும் மிருக காட்சி சாலைகளில் மிருகங்களுக்கு கொடுக்கபடக்குடிய உணவு முறைகள் மற்றும் மிருகங்களை நெருங்கும் விதிகளை மீறியதாலும்.அலட்சியமாக இருந்ததாலும் தான் இந்த நிலை ஏற்பட்டதாக மிருகச்சாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.