திருமணம் முடிந்த சில நிமிடங்கள்..! பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்ட புது மாப்பிள்ளை உடல்! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

பாகிஸ்தானில் மணமேடையிலேயே மணமகன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.


பாகிஸ்தானில் பெஷாவரை சேர்ந்தவருக்கும் ஒரு பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது ஆடல், பாடலுடன் அனைவரும் குஷியாக இருந்தனர். அப்போது மணமகன் அங்கு நடனம் ஆடிய ஒரு பெண்ணை வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் நண்பர்கள் கோபம் அடைந்தனர்.

ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் எப்படி வீடியோ எடுக்கலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அங்கிருந்த வெளியேறிய அந்த நபர்கள் சிறிது நேரம் கழித்து திருமண மண்டபத்திற்கு துப்பாக்கியுடன் வந்தனர். அங்கு மணமேடையில், மனைவியுடன் நின்று பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த மணமகனை பார்த்து அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் நிலைகுலைந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார் மணமகன். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை மணமகனை உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தது. மணமகனை சுட்டுக் கொன்றவர் பெயர் அபித் என தெரியவந்துள்ளது. தலைமறைவான அவரை தற்போது போலீஸ் தேடி வருகிறது. திருமண மண்டபத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் அங்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த சில மணித்துளிகளில் கணவருடன் வாழப்போகிறோம் என்ற பெண்ணின் கனவுகளும் கரைந்து போனது.