கம்பீரமாக நுழைந்த இந்திய போர் விமானங்கள்! வாலை சுருட்டி தெறித்து ஓடிய பாக்., போர் விமானங்கள்!

இந்திய போர் விமானங்களின் பிரமாண்ட அணிவகுப்பை பார்த்து பாகிஸ்தான் போர் விமானங்கள் வாலை சுருட்டுக் கொண்டு தெறித்து ஓடியுள்ளன.


வெற்றிகரமாக தீவிரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தன. அப்போது தான் பாகிஸ்தான் ராணுவப்படைக்கு இந்திய விமானங்கள் உள்ளே நுழைந்த தகவல் சென்றுள்ளன.

உடனடியாக பாகிஸ்தான் விமானப்படை இந்திய விமானப்படை விமானங்களை வழிமறிக்க தனது F16 ரக விமானங்களை அனுப்பி வைத்துள்ளது. இந்திய விமானங்கள் தாக்குதலை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தன.

அப்போது இந்திய போர் விமானங்களுக்கு எதிரே பாகிஸ்தானின் F16 ரக விமானங்கள் வந்துள்ளன. ஆனால் இந்தியாவின் மிராஜ் 200 ரக விமானங்கள் பார்க்கவே கம்பீரமாகவும், பிரமாண்டமாகவும் இருக்கும். அவற்றுக்கு முன்னால் F16 விமானம் கொசுவை போல இருக்கும்.

மேலும் இந்தியாவின் மிராஜ் 2000 விமானங்கள் சுமார் நான்கு ஒரே நேரத்தில் எதிர்பட்டுள்ளன. இதனை பார்த்த பாகிஸ்தான் விமானப்படையின் F16 ரக விமானத்தின் விமானி தனது வாலை சுருட்டிக் கொண்டு திரும்பியுள்ளார்.

ஒரு வேலை இந்திய விமானங்களை நோக்கி தாக்குதல் நடத்தியிருந்தால் நொடிப் பொழுதில் பாகிஸ்தான் விமானத்தின் கதையை இந்திய விமானிகள் முடித்திருப்பார்கள். ஆனால் பாகிஸ்தான் விமானி சுதாகரித்துக் கொண்டதால் தப்பியுள்ளார்.

அதாவது இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக விமானங்களின் அணிவகுப்பை பார்த்து பாகிஸ்தான் விமானப்படை விமானிகள் தெறித்து ஓடியுள்ளனர். இதன் மூலம் இந்திய விமானப்படையின் பலம் பாகிஸ்தானுக்கு டெமோவாக பார்க்கப்பட்டுள்ளது.