ஒரு மனைவியும் 6 கள்ளக் காதலிகளும்! பிரபல கிரிக்கெட் வீரர் வெளியிட்ட ஷாக் தகவல்!

நான் ஒரு கள்ளக்காதல் மன்னன்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒப்புதல்


லாகூர்: எனக்கு நிறைய கள்ளக்காதலிகள் இருந்தனர் என்று, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தனித்துவமான பங்களிப்பு செய்தவர் அப்துல் ரஸாக். ஆல் ரவுண்டரான இவர், பாகிஸ்தானிய டிவி நிகழ்ச்சி ஒன்றில் தனது தனிப்பிட்ட வாழ்க்கை பற்றி ஒரு ரகசிய தகவலை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஆம், தனக்கு திருமணத்தை கடந்து, 5 முதல் 6 கள்ளக்காதலிகள் இருந்தனர் என்றும், தற்போது அவர்களுடனான உறவு முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அப்துல் ரஸாக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய கள்ளக்காதல் சம்பவங்கள் வாழ்க்கை முழுவதும் நீடிக்காது. இவை, குறுகிய காலமே நீடிக்கும். அதற்கு நானே சாட்சி, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பு வரை எனக்கு எந்த முறைகேடான செக்ஸ் உறவும் இருந்ததில்லை. இவை அனைத்தும் திருமணத்திற்கு பின்பு ஏற்பட்டவையே. எனவே, இவற்றை ஒப்புக் கொள்வதில் எனக்கு தயக்கம் இல்லை என்றும் அப்துல் ரஸாக் குறிப்பிட்டுள்ளார். 

அவர் இப்படி கூறிய தகவல், பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்த டிவி நிகழ்ச்சி தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆல் ரவுண்டர் பயிற்சி அளிக்க விரும்புவதாக, அப்துல் ரஸாக் கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.