சீன இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள விலை பேசி விற்கப்படும் முஸ்லீம் பெண்கள்! ஆனால்..? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

லாகூர்: பாகிஸ்தானைச் சேர்ந்த 629 பெண்கள் மணப்பெண்களாக, சீனர்களுக்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தானுடன் சீனா நெருங்கிய உறவை பின்பற்றி வருகிறது. இதனால், இரு தரப்பு மக்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதோடு, இரு நாட்டைச் சேர்ந்தவர்களும் எல்லை கடந்து தங்களது குற்றச் செயல்களை விரிவுபடுத்தவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்படி, சமீபத்தில் பாகிஸ்தான் போலீசார் நடத்திய விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகளை தொகுத்து, தி அசோசியேட்டட் பிரஸ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.  

அந்த செய்தியில், கடந்த 2018ம் ஆண்டு முதல், பாகிஸ்தானில் இருந்து பெண்களை கடத்திச் சென்று, சீனர்களுக்கு விற்பனை செய்வதை சிலர் தொழிலாகச் செய்து வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் 31 சீனர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பாகிஸ்தான் போலீசார் ஏற்கனவே கைது செய்து, ஃபைசாலாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து இதுவரை 629 பெண்களை கடத்திய அந்த நபர்கள், அவர்களை சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு மணப்பெண்களாக மாற்றி விற்பனை செய்துள்ளனர். பாகிஸ்தானிய பெண்களுக்கு சீனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதே இதற்கு காரணமாகும். இந்த வாயப்பை பயன்படுத்திக் கொண்டு, இவர்கள் 31 சீனர்களும் ஆள்கடத்தலை வெற்றிகரமாகச் செய்துள்ளனர்.

அத்துடன் தங்களை கேள்வி கேட்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து சமாளித்துள்ளனர். எனினும், தற்போது நீதிமன்ற விசாரணையில் இவர்கள் மீதான குற்றம் உறுதியாகியுள்ளது என்பதால், விரைவில் தண்டனை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தண்டனை கொடுக்கும்பட்சத்தில் பாகிஸ்தான், சீனா நட்புறவில் இது பிரச்னையை ஏற்படுத்தலாம் என்று, அரசியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.