சரஸ்வதி பூஜைக்கு ஜாமீன் கேட்கிறார் ப.சிதம்பரம்! பெரியவரை வெளியே விடுங்கப்பா!

இந்தியாவிலே மிகப்பெரிய பதவிகள் இருந்தவன் என்பதால் நான் வெளிநாட்டுக்கு ஓடிப்போக மாட்டேன் என்று சிதம்பரம் நீதிமன்றத்தில் சொன்னார்.


அதையே பிடித்துக்கொண்ட நீதிமன்றம், இத்தனை பெரிய பதவியில் இருந்த காரணத்தால் ஓடிப்போக வாய்ப்பு உண்டே என்று சொல்லி, ஜாமீன் விவகாரத்தை தள்ளிப்போட்டு வருகிறது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ரூ.305 அந்நிய முதலீட்டு அனுமதி அளிக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ப.சிதம்பரம் ஆகஸ்ட் 21ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, செப்டம்பர் 5 முதல் ப.சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்றக் காவல் அக்டோபர் 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிட்டத்தட்ட 4 வாரங்களாக திஹார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம், ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்கும்படி, ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். ஆனால், நீதிமன்றமோ அவசரம் எதுவும் காட்டுவதாக இல்லை.

சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்று சி.பி.ஐ. சொல்வதால் மீண்டும் ஜாமீன் கிடைக்காது என்றே தெரிகிறது. வயசான காலத்துல சரஸ்வதி பூஜையை எப்படி ஜெயில்ல கொண்டாடுறது? வெளியே விடுங்கப்பா, இனிமே ட்வீட் போடவேண்டாம்னு சொல்லிடலாம்.