7 மாத சம்பள பாக்கி! முதலாளியை கடத்தி ஊழியர்கள் செய்த தரமான சம்பவம்!

7 மாதங்களாக ஊதியம் தராத முதலாளியை கடத்தி அடைத்து வைத்து சித்திரவதை செய்த 4 ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


பெங்களூரைச் சேர்ந்த 23 வயது இளைஞரான சுஜய் என்பவர், பெங்களூரை அடுத்த ஹலாசூரில் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தொழில் சுணக்கம் காரணமாக இவர் தனது ஊழியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஊதியம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரத்தில் இருந்த 7 ஊழியர்கள் ஆத்திரத்தில் இருந்ததாகவும் சுஜயைக் கடத்த திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. திட்டத்தை செயல்படுத்திய அவர்கள் சூஜயைக் கடத்தி பெங்களூரில் நண்பர் ஒருவரின் குடியிருப்பில் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. 

சில நாட்கள் அவர்கள் பிடியில் இருந்த சுஜய், அவர்களது ஊதிய நிலுவையை தர ஒப்புக்க்கொண்டபிறகே அவர்கள் அவரை விடுவித்ததனர். சுஜய் ஹலாசூரு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 4 பேரை கைது செய்த போலீசார் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.