தாயின் கள்ளக்காதலனால் கொடூர கொலை! சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! போலீசாரையே கண்ணீர் விட வைத்த சம்பவம்!

தாயின் கள்ளக்காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுவன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் போலீசாரையே கண் கலங்க வைத்துள்ளது.


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் பிஜூ. இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். கடந்த ஆண்டு பிஜூ திடீரென்று இறந்து போனார். கணவர் இறந்த சில தினங்களிலேயே பிஜூவின் மனைவி நெருங்கிய உறவினரான அருண் ஆனந்த் என்பவருடன் சேர்ந்து வாழத் தொடங்கினார்.   

தன் குழந்தைகளை அருண் ஆனந்த் கொடுமைப்படுத்துவதை தாயும் தட்டிக் கேட்கவில்லை. சிறுவர்களுக்குச் சரியாக உணவும் அளிப்பதில்லை. பள்ளிக்குச் சென்றால் சக மாணவர்களிடத்தில், `சாப்பிட ஏதாவது தாங்களேன்' என்று பசியுடன் கேட்பார்களாம். இந்த நிலையில், மார்ச் 28-ம் தேதி இரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது, சிறுவனின் 4 வயது தம்பி படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டான். இதைப் பார்த்த அருண் ஆனந்த் 4 வயது சிறுவனை அடித்துள்ளார். தம்பியை அடிப்பதைத் தடுக்க சிறுவன் முயன்றான். இதனால், சிறுவனைத் தரையில் தள்ளி காலால் மிதித்துத் தரையில் ஓங்கி அடித்துள்ளார்.

தொடர்ந்து மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். சிறுவனின் மண்டை ஓடு உடைந்து மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது. உடல் முழுவதும் 20 இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன. சிறுவனின் நிலையைக் கண்டு மருத்துவர்கள் பதறிப் போனார்கள்.மருத்துவர்கள் சிறுவனைக் காப்பாற்ற கடும் சிரமத்தை எடுத்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவமனைக்கு வந்து சிறுவனைப் பார்த்தார். ஆனாலும், மருத்துவர்களின் முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை. 

சிறுவன் தங்கியிருந்த அறையை போலீஸார் சோதனையிட்டனர். சிறுவனின் நோட்டுப் புத்தகங்களை ஆய்வு செய்தபோது, ஒரு நோட்டுப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கண்ணாடி அணிந்த மனிதர் போன்ற படம் வரையப்பட்டிருந்தது. அந்தப் படம் சிறுவனின் தந்தை பிஜூ கண்ணாடி அணிந்திருப்பார். அதேபோன்று உள்ளதாக அக்கம் பக்கத்தினர் சொல்ல அங்கிருந்த பெண் போலீஸாரின் கண்களில் நீர்த் துளிகள் திரண்டு விட்டது