தி.மு.க.வுக்கு சோதனை மேல் சோதனை.. ஜெகத்ரட்சகனின் 89 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்.

தி.மு.க.வுக்கு சோதனை மேல் சோதனை என்று தான் சொல்ல வேண்டும். இப்போது முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதியின் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் சொத்துக்களை அமலாக்கதுறை முடக்கி உத்தரவிட்டுள்ளது.


கடந்த ஜூலை மாதத்தில் அமலாக்க இயக்குநரகம் ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியது. தில், ஜெகத்ரட்சகன் சென்னை குரோம்பேட்டையில் ரூ 65 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த ஜெகத்ரட்சகன் அமலாக்கத்தித்துறை விசாரணைக்கு நான்கு வார இடைக்காலத் தடை வாங்கினார்.

இதற்கிடையே சிங்கப்பூர் நிறுவனத்தில் விதிமுறைகளை மீறி பங்குகள் வாகியததாக ஜெகத்ரட்சகன் மீது உள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், வெளிநாட்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் ஜெகத்ரட்சகனின் 89.19 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது, தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தேர்தல் வருவதற்குள் இன்னமும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ..?