அளவுக்கதிகமா வியர்க்கிறதா! அதுக்கு இதுதான் காரணம்!

உழைப்பே இல்லாதவர்களைவிட உழைப்பவருக்கும், நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவருக்கும் இரண்டு மடங்கு வியர்வை வெளியேறுகிறது.


வியர்வை வெளிப்படுவது என்பது ஒவ்வொருவருக்கும் நடக்கும் ஒரு சாதரண நிகழ்வு தான். இந்த வியர்வை ஒவ்வொருவருக்கும் அவர்களின் தோலிலுள்ள வியர்வைச் சுரப்பிகள் இயல்பாக சுரந்து, வியர்வை திரவத்தை கசியவைத்து வெளியேற்றுகின்றன. லருக்கு மற்றவர்களை விட அதிகப்படியான வியர்வை வெளியேற உடல் வெப்பநிலை அதிகரிப்பும் ஓர் காரணம். எனினும், உடலின் சில பாகங்களில் குறிப்பாக அக்குள், அடிப்பாதங்கள், உள்ளங்கை மற்றும் நெற்றியில் வியர்வை சுரப்பிகள் அதிகம் உள்ள காரணத்தால் இங்கு அதிகமாக வியர்வை சுரக்கிறது.

மத்திய நரம்புத் தொகுதியின் அதீதச் செயல்பாடு காரணமாக கை, கால் போன்ற பகுதிகளில் அதிகளவு வியர்வையை சுரக்கிறது. பெண்களை விட ஆண்களுக்கே அதிக வியர்வை சுரப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயல்பான வியர்வையோ, அதிக வியர்வையோ அது வெளியேறும் சமயத்தில் மணம் எதுவும் இருப்பதில்லை. ரத்தத்திலுள்ள வெளியேற்றப்பட வேண்டிய பொட்டாசியமும், உப்பும், நுண்கிருமிகளுடன் கூட்டணி ஏற்படுத்திய பின்னரே துர்நாற்றம் உண்டாகிறது. வியர்வையை குளிப்பதன் மூலம், கை கால்களை கழுவுவதன் மூலம் முறையாக அகற்றவேண்டும். இதற்காகவே இருக்கும் சில பிரத்யேக சிகிச்சைகள் மூலம் இதற்கு தீர்வு காணலாம்.