பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஓவர் ஸ்பீடு! சாலை வளைவில் பல்டி அடித்து கவிழ்ந்த கோரம்! 4 பேர் பலி! 5 பேர் உயிர் ஊசல்!

பெங்களூரு: பிறந்த நாள் கொண்டாட்டம் விபரீதமாக மாறியதில் 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


கர்நாடகா மாநிலம், எம்எஸ் பால்யா பகுதியை சேர்ந்தவர் மல்லிகார்ஜூனா ரெட்டி. இவருக்கு, 26வது பிறந்த நாள் வந்துள்ளது. இதனைக் கொண்டாட தனது நண்பர்கள் அசோக் ரெட்டி, நாகாராஜூ, சுந்தர்  உள்ளிட்டோருடன் சேர்ந்து, நந்தி ஹில்ஸ் பகுதிக்குச் சென்று, சூரியன் உதயமாகும்போது கேக் வெட்ட தீர்மானித்துள்ளார்.

இதற்காக, காரில் சென்றபோது பெங்களூரு விமான நிலையம் அருகேயுள்ள தேவனஹள்ளி பகுதியில் கார் கவிழ்ந்துவிட்டது. அதில், நிகழ்விடத்திலேயே 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

எனினும், விபத்து நிகழ்ந்ததில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் நீண்ட நேரம் யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், இதுபற்றி தி இந்து நாளிதழ் விரிவான புலனாய்வு செய்து, அவர்களின் அடையாளத்தை கண்டுபிடித்து, செய்தியாக வெளியிட்டுள்ளது.

அத்துடன், சம்பந்தப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு, தகவல் தெரிவித்தனர். பிறந்த நாள் கொண்டாட வேண்டிய நபர் மட்டுமின்றி அவரது நண்பர்களும் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.