ஒரு தம்பிரானை பரதேசியாக்கிய அரசியல்வாதிகள்! திருவாவடுதுறை ஆதினத்தில் ஊழலோ ஊழல்!

திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான , திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமிகள் கோவிலின் கட்டளை தம்பிரானாக இருந்தவர் சுவாமிநாதன்.


அவரை கடந்த 15ம் தேதி குருமகா சன்னிதானம் திருவாவடுதுறை மடத்துக்கு அழைத்து சாமிநாதனை அவரைப் கட்டளைத்தம்பிரான் பதவியிலிருந்து நீக்கிவதாக அறிவித்திருக்கிறார்.அப்போது தனக்கு உடல் நிலை சரியில்லை என்றுகூறி தம்பிரான் பதவியைத் துறந்து வெள்ளை உடை அணிந்து மறுநாளே காசி யாத்திரைக்கு கிளம்பிவிட்டார்.

இதன் பின்னணியில் அரசியல் வாதிகள் தலையீடு இருப்பதாக உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள். திருவாவடுதுறை ஆதீனம் மிகப் பழைமையானது.உதாரணத்திற்கு தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் தமிழ் கற்றது இங்கேதான்.அதுமட்டுமல்ல இந்தியா சுதந்திரம் அடைவது உறுதியான சமையத்தில் மெளண்ட் பேட்டன் ராஜாஜியிடம் ,

இங்கிலாந்திடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும்.என்ன செய்யலாம் என்று ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்.அதற்கு ராஜாஜி நான் ஒரு செங்கோல் ஏற்பாடு செய்கிறேன் , அதை நீங்கள் நேருவின் கையில் கொடுங்கள் என்று சொன்ன ராஜாஜி நேராக திருவாடுதுறை மடத்துக்குத்தான் வந்தார்.

அப்போதைய மகாசன்னிதானம் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார்.ஆனாலும் செங்கோலில் இடம் பெற வேண்டிய சைவச்சின்னங்களை சொல்லி உம்மிடி பங்காரு நகைக்கடையில் ஒரு வெள்ளிச் செங்கோல் செய்யவைதார் ஆதீனம்.அதோடு சடைச்சாமி என்கிற ஒரு கட்டளைத் தம்பிரானையும்,ஒரு ஓதுவாரையும் ராஜாஜியுடன் அனுப்பி வைப்பதாகச் சொன்னார்.

அதோடு மெளண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை பெறும் முன்பு பாட வேண்டிய 11 தேவாரப் பாடல்களையும் குறித்துக் கொடுத்து இருக்கிறார்.அதோடு,ஓதுவார்,சடைச்சாமி,ராஜாஜி மூவரும் தனி விமானத்தில் டெல்லி வந்தார்கள்.1947 ஆகஸ்ட் 14ம் தேதி இரவு 11.45 க்கு சன்னிதானம் சொன்னபடி,தேவாரதின் கோளறு பதிகம் பாடத்துவங்கினார்.

அதில் 11 வது பாடலான வேயுறு தோளிபங்கன் என்கிற பாடலின் கடைசி வரிகாளான 'அடியார்கள் வானில் அரசாள்வர்.ஆனை நமதே என்ற வரியை பாடி முடித்ததும் மெளண்ட் பேட்டன் திருவாடுதுறை ஆதீனம் தந்த செங்கோலை சடை சாமி வாங்கி நேருவிடம் தர சுதந்திர இந்தியா பிறந்தது.இத்தனை சிறப்புகள் கொண்ட திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான ,திருவிடை மருதூர் மகாலிங்க சாமி கோவிலின் கட்டளைத் தம்பிரான் பதவி விலக காரணம் உள்ளூர் அரசியில் வாதிகளே காரணம் என்று சொல்லப்படுகிறது.

மகாலிங்க சுவாமி கோவிலுக்குச் சொந்தமான குளங்களை மடத்தின் சார்பாக தூர்வாரும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் சாமிநாத தம்புரான்.அவரை அனுகிய உள்ளூர் அரசியல் புள்ளிகள் குளத்தில் இருந்து எடுக்கப்படும் மண்ணைத் தங்களுக்குத் தரவேண்டும் என்று கேட்க,சுவாமிநாதன் அந்த மன்னை குளக்கரைகளை பலப்படுத்த அந்த மண்ணைப் பயண்படுத்தப் போவதாகச் சொல்லி இருக்கிறார்.

அதுதான் கட்டளை தம்பிரான் விலக்கப்பட காரணம் என்று உள்ளூர் மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். பதவி விலகிய சுவாமிநாத தம்புரான் வெள்ளை ஆடையில் காசி பயணம் சென்று இருக்கிறார்.

தற்போது திருவாவடுதுறை ஆதினத்தில் வெள்ளை வேட்டிகளின் ஆதிக்கம் அதிகமாகி விட்டதாகவும்,அதனால்தான் ,தான் இப்போது காசிக்கு வந்திருப்பதாகவும் சொன்ன சாமிநாதன்,தான் இனித் தன்புரான் அல்ல சாமிநாத பரதேசியாக தனது துறவற வாழ்க்கையை துவங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.விரைவில்,இதன் பின்னணி செய்திகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.