ஆஸ்கர் விருதுகளை அள்ளிய பாரசைட், விஜய் படத்தின் காப்பியா..? சூட்சும கதையும் விறுவிறு திரைக்கதையும்!

சிரித்துக்கொண்டே கழுத்தை அறுப்பது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், அதனை நேரடியாகப் பார்க்கவேண்டும் என்றால், ஆஸ்கர் விருதுகளை அள்ளிய பாரசைட் படத்தைப் பார்க்கலாம்.


இந்த உலகம் இரண்டு வகையான மக்களால் சூழப்பட்டுள்ளது. அதாவது பணக்காரர்கள் மற்றும் அவர்களை அண்டிப் பிழைக்கும் அடிமை மக்கள். இது காலம் காலமாக இருக்கும் சூழல்தான். இந்த அண்டிப் பிழைப்பதின் போராட்டத்தில் ஏழை வர்க்கத்துக்கு உள்ளேதான் சண்டை மூள்கிறது.

எப்போதாவது ஒரு முறை இந்த போராட்டம், பணக்கார வர்க்கத்திற்கெதிராக திரும்பும். அதாவது ருஷ்ய புரட்சி நடந்தது போன்ற சூழலில் அப்படி நிகழும். ஏழை குடும்பம் ஒன்று அருகேயுள்ள பணக்கார குடும்பத்தின் வாழ்க்கையை வாழ முயற்சிப்பதுதான் கதை. ஆனால், இந்தக் கதையை முழுக்க முழுக்க சிரிக்கும் வகையில் கொடுத்திருப்பதில்தான் ஜெயித்திருக்கிறார் இயக்குனர். 

அந்த ஒவ்வொரு சிரிப்புக்கும் பின்னே கொடூரமான உண்மை ஒன்று ஒளிந்திருப்பதை நாம் உணரமுடிவதுதான் படத்தின் சிறப்பு. அதனால்தான், இந்தப் படம் விருதுகளைப் பெறும் தகுதி பெற்றிருக்கிறது.

இந்த நேரத்தில் இந்தப் படம் நமது தளபதி விஜய் நடித்த மின்சார கண்ணாவை பார்த்து எடுக்கப்பட்ட்து என்று இணையதளங்களில் செய்தி உலா வருகிறது. செல்வத்தில் மிதக்கும் விஜய்யின் குடுத்தினர் அனைவரும் ஏழை வேஷம் போட்டு, நாயகியின் வீட்டுக்குள் நுழைவதுதான் மின்சார கண்ணா.

ஆனால், ஒன்று இந்த ஒரு விஷயத்தை மட்டும் பாரசைட் இயக்குனர் கேட்டால், நிச்சயம் தற்கொலை செய்துகொள்வார்.