கனவாகிப்போன முதலமைச்சர் பதவி! ஆளுநராக ஓபிஎஸ் திடீர் முடிவு! வெளியான அதிர்ச்சித் தகவல்!

தமிழக முதலமைச்சர் பதவி எட்டாக்கனியாகி விட்ட நிலையில் ஆளுநர் பதவியாவது கிடைக்குமா என ஓபிஎஸ் இயக்கத்தில் இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.


தமிழக முதலமைச்சராக இருந்தவர் பன்னீர்செல்வம் சசிகலா தரப்பில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அந்தப் பதவியில் இருந்து விலகினார். பிறகு அதிமுகவை உடைத்து அக்கட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தை ஓரம்கட்டிவிட்டு மீண்டும் அதிமுகவில் இணைந்து தற்போது அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆக இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம்.

அதிமுக உடைப்பு மற்றும் இணைப்பு ஆகிய இரண்டுமே டில்லியின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் அதிமுக இணைப்பின் போது ஒரு வருடத்திற்கு பிறகு முதலமைச்சர் பதவியை தருவதாக பன்னீர்செல்வத்திற்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக அப்போதே தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் போ பன்னீர்செல்வத்திற்கு முதலமைச்சர் பதவி வருவதற்கான சூழல் இல்லை. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்காக தேர்தல் பணியாற்ற வாரணாசி சென்ற பன்னீர்செல்வம் அங்கு பாஜக நிர்வாகி களிடம் மீண்டும் முதலமைச்சராக குறித்து பேசியதாக சொல்கிறார்கள்.

ஆனால் தமிழக அரசியல் சூழலை எடப்பாடி பழனிசாமி திறம்பட கவனித்து வருவதால் அவரை அந்தப் பதவியிலிருந்து மாற்ற பாஜக மேலிடம் தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் ஓ பன்னீர்செல்வம் எதையும் இழக்கத் தயாராக இல்லாத மேலிடம் அவருக்கு ஆளுநர் பதவியை கொடுக்க முன் வந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. பாஜகவிடம் இருந்து இப்படி ஒரு ஆஃபர் கொடுக்கப்படும் என்பதை ஓ பன்னீர்செல்வம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

மகனை தீவிர அரசியலில் களம் இறக்கி விட்ட நிலையில் நாம் பேசாமல் ஆளுநர் ஆகிவிட்டால் என்ன என்று ஓபிஎஸ் யோசிப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த நிலையில் தான் செய்த அவனிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் பாஜக மேலிடத்திடம் தனக்கு ஆளுநர் பதவி வேண்டும் என்று ஓபிஎஸ் காய் நகர்த்தி வருவதாக வெளிப்படையாக கூறியுள்ளார். ஆனால் இதெல்லாம் வெறும் வதந்தி என்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ் எப்படி ஆளுநர் பதவி கேட்பார் என்று அவரது ஆதரவாளர்கள் பதில் அளித்து வருகின்றனர்.