இபிஎஸ்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லாத ஓபிஎஸ்! கட்சிக்குள் கசமுசா!

தேர்தல் பரபரப்பு காரணமாக தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தவிர்க்கும்படி எடப்பாடி சொல்லியிருந்தார். அதனால், 12ம் தேதி எங்கேயும் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாளுக்கு விழா ஏற்பாடு செய்யப்படவில்லை. முதல் ஆளாக எடப்பாடிக்கு வாழ்த்து சொன்னவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.


கொங்கு மண்டல அமைச்சர்கள் சிலர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர், மற்றவர்களை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். அதனால் பலரும் போனிலேயே வாழ்த்து தெரிவித்தனர். எடப்பாடிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அதைக் கேட்டதும்தான் எடப்பாடி ஹேப்பி மூடுக்கு வந்திருக்கிறார்.

வழக்கமாக அரசு உயர் அதிகாரிகள் அனைவரும் வாழ்த்து தெரிவிப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு ஒருசில அதிகாரிகள் மட்டுமே வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். மற்ற யாரும் கண்டுகொள்ளவில்லை. எப்படியும் ஆட்சி மாற்றம் நடக்கப்போகிறது என்ற எண்ணத்தில்தான் பலரும் போன் செய்யவே இல்லயாம்.

இந்த நிலையில், எடப்பாடி பன்னீருக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தாரா என்பதுதான் சர்ச்சையாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஏனென்றால், முதலமைச்சர் சார்பில் தகவல் தெரிவித்தவர்கள் பிரதமர், கவர்னர், தமிழிசை போன்றவர்களுடன் ஓ.பன்னீர்செல்வமும் வாழ்த்து தெரிவித்ததாக சொன்னார்கள்.

ஆனால், ஓ.பி.எஸ். தரப்பில், ‘நான் யாருக்கும் வாழ்த்து சொல்லவே இல்லையே..’ என்ற ரீதியில் பிட் போடப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதனால் அ.தி.மு.க.வில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் சர்ச்சை பன்னீர் வாழ்த்து சொன்னாரா என்பதுதான். இதுகுறித்து இ.பி.எஸ். தரப்பில் விளக்கம் கேட்டால், தேர்தல் முடிவு வரட்டும் என்கிறார்கள். 

இதுக்குமா தேர்தல் வரணும்...