ஓபிஎஸ் வீட்டில் ரூ.50 லட்சத்தில் வெளிநாட்டு வாஸ்து மீன்!!

துணை முதலமைச்சரும் அதிமுக வின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் வீட்டிற்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பில் வெளிநாட்டிலிருந்து வாஸ்து மீன் வரவழைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த சில மாதங்களாகவே ஓபிஎஸ் இருக்கு அதிமுகவும் சரி ஆட்சியிலும் சரி பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அவரது தீவிர ஆதரவாளர்களாக இருந்த ராஜகண்ணப்பன் மைத்ரேயன் உள்ளிட்டோர் விலகிச் சென்றுவிட்டனர். இதற்குக் காரணம் அவர்களின் எதிர்பார்ப்பை ஒப்பிட்டால் பூர்த்தி செய்ய முடியாததுதான்.

ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாததற்கு காரணம் ஓபிஎஸ் இருக்கு ஆட்சியிலும் சரி கட்சியிலும் சரி பெரிய அளவில் அதிகாரம் இல்லை என்பதுதான். தன்னுடைய மகனுக்கு தேனி தொகுதியை வாங்கவே எடப்பாடி பழனிசாமி இடம் ஓபிஎஸ் கடுமையாக போராடியதாக கூறுகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் தன் மீதும் தன் குடும்பத்தின் மீதும் இருக்கும் திருஷ்டி தான் என்று ஓபிஎஸ் கருதுவதாக சொல்கிறார்கள். இதனால் திருஷ்டி கழிக்க வாஸ்து மீன் வலை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்துள்ளார் ஓபிஎஸ்.

சீனாவிலிருந்து பிரத்தியேகமாக கொண்டு வரப்பட்டுள்ள இரண்டு வாஸ்து மீன்கள் ஒன்று சென்னை வீட்டிலும் மற்றொன்று தேனி அருகே உள்ள பெரியகுளம் வீட்டிலும் ஓபிஎஸ் வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இந்த வாஸ்து மீன்கள் இன் மதிப்பு இந்திய மதிப்பில் 50 லட்சம் ரூபாய் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

இந்த வாஸ்து மீனின் வருகைக்கு பிறகாவது கட்சியிலும் ஆட்சியிலும் தன்னுடைய அதிகாரம் கோலோச்சும் என்று ஓபிஎஸ் கருதுகிறார். அது நடைபெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.