நிவர் புயல் நிவாரணத்தில் அசத்திய துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்.

எந்த ஒரு சோதனை ஏற்படும் நேரத்திலும் மக்களுக்கு ஆதரவாக பக்கத்தில் நிற்பவர்தான் நல்ல தலைவர் என்பார்கள். அந்த வகையில், நிவர் புயல் சோகத்தில் தவித்த மக்களுக்கு நேரில் சென்று ஆறுதலும் தேறுதலும் சொல்லி, நிவாரண உதவிகளையும் செய்து அசத்தியிருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.


நிவர் புயலின் காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையிலும் இரவு பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நிவர் புயல் பாதிப்புகள் குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் தேவையான வசதிகளை செய்துகொடுக்க அதிகாரிகளுக்கு ஓ.பி.எஸ். உத்தரவிட்டதை அடுத்து மக்கள் சோகத்தை மறந்து பாராட்டு தெரிவித்தனர்.