வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார் ஓபிஎஸ் மருமகள்! ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு துணை முதலமைச்சர் ஓபிஎஸின் மருமகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.


தேனி நாடாளுமன்றத் தேர்தலில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவரை ஆதரித்து தான் அவரது மனைவியும் ஓபிஎஸின் மருமகனுமான ஆனந்தி பிரச்சாரத்தை துவக்கி உள்ளார்.

தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடபுதுப்பட்டி கிராமத்திற்கு ரவீந்திரநாத் குமாரின் மனைவி ஆனந்தி தன்னுடைய உறவினர்கள் மற்றும் அதிமுக மகளிர் அணியினர் உடன் சென்றார். முதலில் அந்த ஊரில் உள்ள கோவிலில் ஆனந்தி சாமி தரிசனம் செய்தார்.

அதன்பிறகு வீடு வீடாக சென்று தனது கணவர் ரவீந்திரநாத் குமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று பெண்களிடம் கேட்டுக்கொண்டார். வந்திருப்பது துணை முதலமைச்சர் என் மருமகள் என்று தெரிந்ததும் அனைவரும் அவரை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.

சில வீடுகளில் ஓபிஎஸ் என் மருமகள் ஆனந்திக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னுடைய கணவரை வெற்றிபெறச் செய்தால் தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவார் என்று ஆனந்தி அப்போது வாக்குறுதி அளித்தார்.

ஆனந்தியுடன் அவரது மாமியார் விஜயலட்சுமி மற்றும் சின்ன மாமனார் ராஜாவின் மருமகளும் உடன் சென்று ரவீந்திரநாத் குமாருக்கு வாக்கு சேகரித்தனர்.