ஊராட்சிக் கூட்டத்தை தடுத்து நிறுத்தியது ஏன்…? எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திரண்டு நிற்கிறார்கள் ஊராட்சித் தலைவர்கள் என்ற அச்சத்தால் கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்திருக்கிறது தமிழக அரசு என்று எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


நோயைக் கட்டுப்படுத்தி விட்டோம் என்ற பாராட்டுரையை தனக்குத் தானே வாசித்துக் கொள்ளும் முதலமைச்சர் தி.மு.க.,வைக் கண்டு அஞ்சி அதே கொரானாவைக் காட்டி அலறுகிறார்! உள்கட்சிப் பிரச்சினைகளின் உச்சாணிக் கொம்பில் குழம்பித் தவிக்கிறார்!

கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்திருப்பது ஒரு ஜனநாயகப் பச்சைப் படுகொலை; திட்டமிட்டபடி நாளை தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களைச் சந்திப்பார்கள். வேளாண் சட்டங்களின் தீமைகளையும் அ.தி.மு.க அரசின் வஞ்சக நாடகத்தையும் மக்களிடம் எடுத்துரைப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.