இன்னும் 6 மணி நேரம் தான்! மணிக்கு 18கிமீ வேகம்! சென்னையை மிரட்டும் ஃபனி புயல்!

வானிலை ஆய்வு மையத்தின் இன்றைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


கிழக்கு மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிலவரப்படி ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னைக்கு தென் கிழக்கே 1180 கி.மீ தொலைவிலும், இலங்கை திருகோணமலைக்கு தென் கிழக்கே 850 கி.மீ தொலைவிலும்,ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 1460 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது.

இது மணிக்கு 18 கி.மீ வேகத்தில்  தொடர்ந்து வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்னும் 6 மணி நேரத்தில் புயலாக உருவாகி 24 மணி நேரத்தில் வட மேற்கு இலங்கை கடற்கரை பகுதியை நோக்கியும் ,72 மணி நேரத்தில் வட தமிழக கடற்கரை பகுதியை நோக்கி   தென் ஆந்திரா மசூலிப்பட்டினம் கடற்கரையை வரும் 30ம் தேதி மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழலில் புயல் உருவாகி சென்னையை நோக்கியே நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.