ஆன்லைனின் ஆர்டர் செய்த நூடுல்ஸ்! வயிற்று வலி, வாந்தி துடித்த இளைஞர்! பிறகு அரங்கேறிய பயங்கரம்!

புதுச்சேரியில் ஓட்டலில் வாங்கிய நூடுல்சை சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.


அங்குள்ள குயவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (27 வயது). இவர் புதுச்சேரி நெடுஞ்சாலையில்  மொரட்டாண்டி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வந்தார்.

நேற்றிரவு வழக்கம்போல பணிக்குச் சென்ற மணிகண்டன், இரவு உணவாக, அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் இருந்து நூடுல்ஸ் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார். பிறகு அதில் பாதியை மிச்சம் வைத்திருந்து இன்று காலை மீண்டும்  சாப்பிட்டிருக்கிறார். 

அடுத்த சில மணிநேரத்தில் அவருக்கு பயங்கரமான வாந்தி, வயிற்று வலி ஏற்படவே, சக ஊழியர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனை அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இரவில் வாங்கி அடுத்த  நாள் காலை வரை வைத்திருந்ததால் நூடுல்ஸ் கெட்டுப் போய்விட்டது. இதனை சாப்பிட்டதால்தான் மணிகண்டன் உயிரிழந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் புதுச்சேரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.