வெங்காய விலை ஜிவ்வுன்னு ஏறுதா…? கவலையை விடுங்க… எடப்பாடியாரின் தமிழக அரசு கை கொடுக்குது.

இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கும் மேலாக எகிறிக்கொண்டு இருக்கிறது. மழை காலம் முழுவதும் இந்த விலையேற்றம் காணப்படும் என்றே சொல்லப்படுகிறது.


இந்த நிலையில், உயர்ந்து வரும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, .முதல்வர் எடப்பாடியின் உத்தரவுப்படி, சென்னையில் நாளை முதல் கிலோ ரூ.45க்கு பெரிய வெங்காயம் பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்படும். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…’ என்று கூறினார்.

வெங்காயம் விலை ஏறும் தகவல் தெரிந்தவுடனேயே அதிரடி நடவடிக்கை எடுத்த எடப்பாடியாரின் செயலை மக்கள் பாராட்டி வருகிறார்கள்.