இனி, தாராளமா ஆம்லேட் சாப்பிடலாம்! வெங்காய விலை 30 ரூபாய்க்கு வந்தாச்சு!

அதிரடியாக குறைந்த வெங்காயம் விலை. கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது கோயம்பேடு காய்கறி சந்தையில்.


கடந்த சில நாட்களாக இந்திய அரசியல் சரித்திரத்தையே புரட்டிப்போட்டது வெங்காய விலை உயர்வு. இந்தியாவில் ஜிஎஸ்டிக்கு பிறகு மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்ற இந்த வேளையில். உணவுப் பொருட்களில் அத்தியாவசியமான வெங்காயம் மற்றும் பூண்டு விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கிலோ 200 மற்றும் 260 ரூபாய் வரை உயர்ந்ததன் காரணமாக. 

அனைத்து மக்களிடமும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்நிலையில் வெங்காய விலை உயர்வு பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். கிண்டல் செய்யும் விதமாக பதிலளித்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி தமிழக முதலமைச்சரை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் காமராஜ் ஆகியோர் வெளிநாட்டில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முயற்சி செய்து வருவதாகவும் கூடிய விரைவில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எனவும். வெங்காயங்கள் இறக்குமதி மூலம் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தனர். 

சென்னை மொத்த வியாபார கிடங்குகள் அமைந்துள்ள கோயம்பேடு சந்தையில். கடந்த சில நாட்களாக வெங்காய வரவு குறைந்திருந்தது காரணத்தினால் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை 6,000 முதல் 8,000 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. அது மட்டுமின்றி தமிழ்நாட்டின் வெங்காய தேவையில் சுமார் 30% ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் உயர்ந்துவிட்ட வெங்காய விலையைக் கருத்தில் கொண்டு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. உள்ளூர் விவசாயிகளுக்கு ஆதரவளித்து வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததன் காரணமாக. 

தமிழகத்திற்கான வெங்காய வரத்து முற்றிலுமாக தடைபட்டது. இதன் காரணமாக கடந்த வாரம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தமிழக அமைச்சர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மூலம் இன்று கோயம்பேடு சந்தைக்கு ஆந்திராவில் இருந்து சுமார் 50 லாரிகளும் வெளிநாட்டு வெங்காய கண்டெய்னர்கள் மூலம் 20 லாரிகளில் வெங்காய லோடுகள் வந்து இறங்கியுள்ளன.

திங்கட்கிழமை இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 70 லாரிகளில் வெங்காயம் வந்ததன் காரணமாக. கோயம்பேடு சந்தையில் அதிரடியாக விலை வீழ்ச்சியை கண்டுள்ளது வெங்காயம். நேற்று கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வெங்காயம் இன்று கோயம்பேடு சந்தை சில்லரை விற்பனையின்படி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கிறார்கள் கோயம்பேடு மொத்த வியாபாரிகள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 8000 வரை விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ மூட்டை. இன்று ரூபாய் 1500 க்கு விற்கப்படுவதாக கூறுகின்றனர் வியாபாரிகள். மேலும் ஆந்திராவில் உற்பத்தி செய்யப்பட்ட வெங்காயங்களை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்ததின் காரணமாக. உள்ளூர் வியாபாரிகள் பெருத்த நஷ்டம் அடைந்ததை கண்ட மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி. 

தங்களுக்கு தேவையான இருப்புகள் போக மீதமுள்ள வெங்காயத்தை தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்துள்ள காரணத்தினால் இன்று ஒரே நாளில் மட்டும் 50 லாரிகளில் ஆந்திர மாநில வெங்காயங்கள் வந்து இறங்கியுள்ளன.

இன்னும் சில வாரங்களில் வெங்காய விலை உயர்வு சீராகி விடும் என்று மாநில அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மணியன் கலியமூர்த்தி