தனது மகன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறி கடந்த ஓராண்டாக துரைமுருகன் வசூலித்த தொகையை ஒரே நாளில் வருமான வரித்துறை அள்ளிச் சென்றுள்ளது.
ஓராண்டு வசூல்! ஒரே நாளில் அள்ளிச்சென்ற வருமானவரித்துறை! தலையில் முக்காடு போட்ட துரைமுருகன்!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த ஓராண்டாகவே துரைமுருகன் பெரும் தொழிலதிபர்கள் வியாபாரிகள் கட்சிப் பிரமுகர்கள் என அனைவரிடமும் வசூல் வேட்டை நடத்தி வந்துள்ளார். தனது மகன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் வெற்றிபெற்ற பிறகு யார் ஆட்சிக்கு வந்தாலும் திமுக அமைச்சரவையில் பங்கேற்கும் என்றும் தனது மகன் அமைச்சராவது உறுதி என்றும் கூறி வந்துள்ளார் துரைமுருகன்.
இவ்வாறு கூறிய வேலூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள தனக்கு தெரிந்த தொழில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்பு கொண்டு தேர்தல் நிதி வாங்கியதாக கூறுகிறார்கள். இப்படி வாங்கிய தேர்தல் தேதியை தான் துரைமுருகன் வார்டு வாரியாக பட்டுவாடா செய்ய தனது kingston கல்லூரிகள் வைத்து ஏற்பாடுகளை செய்ததாக சொல்லப்படுகிறது.
இதனை மோப்பம் பிடித்த வருமான வரித்துறை சொல்லிவைத்தார் போல் துரைமுருகன் வசம் இருந்த பணம் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக அள்ளிச் சென்றது. துரைமுருகனின் உதவியாளர் என்று கூறப்படும் அஸ்கர் அலி என்பவரது வீட்டில் இருந்தும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தமாக சுமார் 25 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கலாம் என்று சொல்கிறார்கள். இந்தப் பணம் அனைத்துமே கடந்த ஓராண்டாக துரைமுருகன் மிகவும் கவனத்துடன் விடாமுயற்சியுடன் தொழில் அதிபர்களிடம் இருந்து நடத்திய வசூல் வேட்டை பணம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
இப்படி தேர்தல் பணிக்காக ஓராண்டாக குருவி சேர்ப்பது போல் சேர்த்த துரைமுருகன் பணத்தை வருமான வரித்துறை ஒரே நாளில் அள்ளிச் சென்றதே அவரது தலையில் முக்காடு போடும் வகையில் அமைந்து விட்டதாகவும் கட்சியினர் முணுமுணுக்கிறார்கள். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத துரைமுருகன் வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டதாகவும் சொல்கிறார்கள்.