திருப்பதி: ஒரு வயது குழந்தையை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரிய பெற்றோர், மருத்துவ செலவு செய்ய முடியாததால் பரிதாபம்
எங்கள் குழந்தையை கொலை செய்ய வேண்டும்..! அனுமதி கொடுங்கள்! நீதிமன்றத்தை அதிர வைத்த இளம் தம்பதி! நெஞ்சை உலுக்கும் காரணம்!
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பவாஜன் மற்றும் ஷப்னா தம்பதி. இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. அநத் குழந்தைக்கு Hypoglycemia எனும் ரத்தச் சர்க்கரை குறைபாடு நோய் உள்ளது. அரிய வகை நோய் என்பதால் மருத்துவச் செலவு மிக அதிகமாவதால், பவாஜன் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளார். தினக்கூலி வேலை செய்துவரும் பவாஜன், இதுவரை நகைகள், சொத்துகளை விற்று, ரூ12 லட்சம் வரை செலவு செய்த பவாஜன், மேலும் மருத்துவச் செலவுக்கு காசு தர முடியாமல் அவதிப்படுகிறார்.
எனவே, தங்களது மகளை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க கோரி பவாஜன் மற்றும் ஷப்னா தம்பதி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்திய நீதித்துறை வரலாற்றில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, 2016ம் ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த மகேஷ் என்ற 5 வயது சிறுவனுக்கு எலும்பு புற்றுநோயால் பாதிப்பு ஏற்பட்டதால், அவனை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி அவனது தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், சிகிச்சை காலத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான், சரியான காரணங்களுக்காக கருணைக் கொலை செய்ய, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.