ஒரே வருடத்தில் ஆறு மாநிலங்களில் பாஜக ஆட்சி அவுட்! காவி வண்ணத்தை இழக்கும் இந்தியா!

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தற்போது வரை சுமார் 6 பெரிய மாநிலங்களில் பாஜக அரசு தனது ஆட்சியை பறிகொடுத்துள்ளது.


இந்தியாவில் மொத்தம் இருந்த 29 மாநிலங்களில் சுமார் 22 மாநிலங்களில் பாஜக அல்லது பாஜக கூட்டணி அரசு நடந்து கொண்டிருந்தது.

பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு இந்திய வரைபடத்தில் காவி வண்ணம் தீட்டினால், ஒட்டு மொத்த இந்தியாவும் அந்த நிறத்தில் காட்சி அளித்தது. ஆனால் காஷ்மீரில் பாஜக அரசு மெகபூபா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றது முதல் அக்கட்சிக்கு பின்னடைவு ஆரம்பித்தது. பிறகு தேர்தல்கள் மூலம் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை காங்கிரசிடம் ஆட்சியை பாஜக பறிகொடுத்தது.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி முறிந்த காரணத்தினால் அங்கும் பாஜக அரசுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. சத்தீஸ்கரிலும் பாஜக அரசு வீழ்ந்தது. தற்போது மராட்டியத்திலும் பாஜக ஆட்சியை பறிகொடுத்துள்ளது. அதாவது மிக முக்கியமா மாநிலங்களான மராட்டியம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி தற்போது இல்லை.

இதனால் இந்திய வரைபடத்தில் இருந்து காவி வண்ணம் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.