தங்க மங்கையின் மடியில் ஒரு குட்டித் தங்கம்.! வைரல் புகைப்படம்!

இந்தப்படம் எடுக்கபட்டது 2001ல்.


அப்போது ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு அகில இந்திய ரயில்வே ஸ்போர்ட்ஸ் மீட்டுக்கு வந்திருந்த பி.டி உஷா,இன்றைய பாட்மிட்டன் உலகச்சாம்பியன் பி.வி சிந்துவின் வீட்டில் தங்கி இருந்தார்.

சிந்துவின் அப்பா அப்போது ரயில்வேயின் கூடைப்பந்து அணியில் விளையாடிக்கொண்டு இருந்தவர் என்பதால் அவரது குடும்பத்துடன் உஷாவுக்கு நல்ல அறிமுகம் இருந்தது.அந்தச் சந்திப்பின் போதுதான் சின்னஞ்சிறு சிந்து உஷாவின் மடியில் இடம் பிடித்து இருக்கிறார்.

2016ல் சிந்துவின் அப்பா ரமனா அனுப்பிய இந்தப் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு இருக்கும் பி.டி உஷா சிந்து,கடந்த ஞாயிறு அன்று உலச்சாம்பியன் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

சிந்து பாட்மிட்டன் போட்டிகளில் விளையாடத் துவங்கிய நாள் முதலே அவரது எல்லா ஆட்டங்களையும் பார்த்து வரும் உஷா பல முறை ஃபைனல்களில் தோற்ற சிந்து ஞாயிறன்று பெற்ற வெற்றிக்காக அவரை பெரிதும் பாராட்டி இருக்கிறார்.சாய்னாவும் , சிந்துவும் எதிர்கால பாட்மிட்டன் உலகில் தவிர்க்க முடியாத பெயர்களாக இருப்பார்கள் என்று எனக்கு அப்போதெ தெரியும் என்று சொல்லும் உஷாஇன்னும் சிந்துவுடன் பேசவில்லை.

அந்த தினம் சிந்துவுக்கு வாழ்க்கையில் முக்கியமான தினம்.அவர் அன்று மிகவும் பிஸியாக இருந்திருப்பார்.அதோடு,அது சிந்துவின் அம்மாவின் பிறந்த நாளும்கூட,எனக்கு அவசரமே இல்லை,விரைவில் சிந்துவை அழைத்துப் பேசி என் வாழ்த்துக்களை சொல்வேன் என்கிறார் பையோளி எக்ஸ்பிரஸ் பி.டி உஷா.