காதலியின் அப்பா ஸ்கூட்டருக்கு தீ வைத்த காதலன்! மிரள வைக்கும் காரணம்!

மகாராஷ்டிர மாநிலம் வசாய் நகரில் தன்னை காதிலிக்க மறுத்த மாணவியின் தந்தையுடைய இருசக்கர வாகனத்துக்கு நெருப்பு வைத்த க்ல்லூரி மாணவனை போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.


வசாய் நகரின் மாணிக்பூர் என்ற இடத்தில் ஒரு குடியிருப்பில் அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட மூன்று வாகனங்களில் ஒன்றின் பெட்ரோல் டாங்க் டியூபை பிடுங்கி விட்டு ஒரு நபர் தீவைக்கும் காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சி ஒன்று பதிவாகியுள்ளது. இதில் அடுத்தடுத்து நின்றதால் இரு வாகனங்கள் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தன. 

இது  தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார்  சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் தொடர்புடைய கல்லூரி மாணவனை கைது  செய்தனர். விசாரணையில், எரிந்த வாகனத்தில் ஒன்று அந்த மாணவனின் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரின் தந்தையுடையது  என்று தெரியவந்தது.

அந்த மாணவன் தன்னுடைய காதலை அந்தம் மாணவியிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அந்த மாணவி ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த அந்த மாணவன், மாணவின் தந்தையுடைய இருசக்கர வாகனத்தை கொளுத்தியது தெரிய வந்தது. 

அதே சமயம் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் விவகாரம் வீட்டுக்கு தெரிந்த பிறகு அந்த மாணவி மாணவனுடன் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரத்தில் இப்படி நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் விசாரணை தீவிரமாகியுள்ளது.