மத்திய சென்னையில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து எடப்பாடி என்று பிரச்சாரம் செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு வீடு! தயாநிதி மாறன் குறித்து எடப்பாடி வெளியிட்ட ஷாக் தகவல்!
தயாநிதிமாறன் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர். அவரை தேர்தல் சமயத்தில் மட்டும் தான் மக்களால் பார்க்க முடியும். தேர்தல் வந்தால் மட்டும் தான் அவர் தொகுதி பக்கம் முகத்தை காட்டுவார். தயாநிதி மாறன் தேர்தலில் நிற்பது சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை காப்பாற்றுவதற்கு தான்.
சென்னை போட் கிளப்பில் தயாநிதி மாறனுக்கு ஒரு கிலோ மீட்டர் நீளத்தில் வீடு உள்ளது. எம்பி ஆகி மக்களுக்கு சேவை செய்ய நினைக்கும் தயாநிதிமாறனுக்கு ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு வீடு எதற்கு?
சரி கொஞ்சம் வசதியாக வாழ வேண்டுமென்றால் ஒரு 20 ஆயிரம் சதுர அடியில் வீடு கட்டிக் கொள்ளலாம் அல்லவா? பாக்கி இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ஏழை மக்களுக்கு தயாநிதிமாறன் கொடுத்து சேவை செய்யலாம் அல்லவா?
எங்கள் கூட்டணி வேட்பாளர் மக்களோடு மக்களாக இருப்பவர். தயாநிதி மாறன் போன்று பெரும் கோடீஸ்வரர் இல்லை.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.