எடப்பாடியார் திருந்தவே மாட்டாரா..? சிவாச்சாரியாருக்கு ஒரு நீதி, சாக்கடைத் தொழிலாளிக்கு ஒரு நீதியா?

செத்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்ற அளவுக்குத்தான் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.


சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளிகள் மரணம் அடையும்போது, மெளனம் காக்கும் அரசு, அதுவே மேன்மக்கள் விபத்தில் சிக்கினால் உடனே உதவிக்கரம் நீட்டுகிறது. கடந்த வெள்ளியன்று, சென்னை வியாசர்பாடியில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளிகள் சார்லஸ் மற்றும் திருமால் இருவரும் உயிர் இழந்தனர். இதுகுறித்து அரசு எவ்விதமான நிவாரண நிதியும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், திருவாருரில் ஆடிப்பூரத்தை ஒட்டி நடைபெற்ற தேர்த் திருவிழாவில். தேரில் ஆராதனை காட்டிவந்த  சிவாசாரியார் முரளி ,திடீரென கீழே தடுமாறி விழுந்து இறந்து விட்டார்.  சாக்கடைத் தொழிலாளர்களுக்கு மனம் இறங்காத தமிழக அரசினால், சிவாச்சாரியார் மரணத்தை ஏனோ தாங்க முடியவில்லை. உடனடியாக, சிவாச்சாரியார் குடும்பத்திற்கு வழங்க முன்று லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுக்க  உத்தரவு பிறப்பித்தார்.

சாக்கடைத் தொழிலாளியும், அர்ச்சகரும் பணி பார்க்கும் நேரத்தில் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள். ஆனால், ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் தடவுவது ஏனோ.?