கியூபா தேசத்துக்கு ஒரு சல்யூட்..!

கியூபா நாட்டைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. சேகுவாரா பற்றியும், பிடல் காஸ்ட்ரோ பற்றியும் கொஞ்சம் தெரியும். இப்போது, அந்த நாடு செய்திருக்கும் ஒரு செயல், உலகத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஆம், கியூபா நாட்டின் கம்யூனிச ஆட்சியாளர்கள் ஒரு ஒப்பில்லா காரியத்தை செய்து உலகையே ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்கள். அதாவது இன்று உலகம் முழுவதும் கொரோனா என்றாலே கதவை மூடி வருகிறார்கள். அப்படித்தான் அந்த கப்பலுக்கும் தலைவிதி நேர்ந்தது. 

என்னாது, கப்பல் முழுவதும் கொரோனா நோயாளிகளா, அதுவும் அறுநூறு பேரா? 'தாங்காது தாங்காது' 'ஓடு ஓடு' 'உள்ளே வராதே' 'எங்காவது தொலைந்து போ' "எங்கள் எல்லைக்குள் எட்டிக்கூடப் பார்க்காதே ஓடு ஓடு" என்று எல்லா நாடும், தனது நாட்டு எல்லையை மூடிக்கொண்டது.

கொரோனா பாதித்த சுமார் 600 பிரிட்டீஷ் பயணிகளை ஏற்றி வந்த கப்பலை, சொந்த நாடும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது குறிப்பாக, அனைத்து நாடுகளும் திருப்பி அனுப்பிய போது, 

கியூபா மட்டும் மனித நேயத்தோடு துணிச்சலாய் தனது துறைமுகத்தில் அனுமதித்து...

தஞ்சம் கொடுத்துள்ளதோடு, மருத்துவமும் வழங்கி அவர்களை குணப்படுத்த முன்வந்துள்ளது...

கியூபா என்னும் சின்னஞ்சிறு நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் உட்பட ராஜீய ரீதியான தடைகள் அனைத்தையும் ஏவி, மற்ற நாடுகளையும் அதற்காக நிர்ப்பந்தித்து வரும் உலகின் பொருளாதாரப் புலிகள் எல்லாம், தெறிச்சு ஓடும் போது, இந்த நோயைக் கண்டு பதறாமல் நின்று எதிர்கொள்ளும் கியூபாதான் இன்றைய உலகின் நிஜ ஹீரோ...!