அதிசயம் ஆனால் உண்மை! முதல் பிரசவம் முடிந்த 26 நாட்களில் இளம் பெண்ணுக்கு மீண்டும் இரட்டை குழந்தை பிறந்தது!

வங்காளதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது முதல் பிரசவம் முடிந்து 26 நாட்களில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்றது அந்தப் பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


வங்காளதேசம் ஹர்ஷா  கிராமத்தைச்  சேர்ந்த   ஆரிஃபா சுல்தானா இவர் கர்பமாகி ஒன்பது மாதங்களே ஆன நிலையில் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி பிரசவவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை நல்ல நிலையில் தான் உள்ளது என உறுதி செய்த பிறகு சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தையை வெளியே எடுத்தனர்.

பின்னர் குழந்தைக்கும் தாய்க்கும் போதுமான சிகிச்சை அளித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். ஆரிஃபா சுல்தானா தம்பதியினருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் கடந்த மீண்டும் வயிற்று வலி வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த ஆரிஃபா  மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார்.

பரிசோதனையின்போது அவர் மீண்டும் கருவுற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் மருத்துவர்கள் வயிற்றில் இரட்டை குழந்தை இருப்பதை கண்டறிந்தனர்.  இரட்டை குழந்தைகளையம் சிசேரியன் மூலம் வெளியே எடுத்தனர். இதனால் குழப்பமடைந்த மருத்துவர்கள் ஆரிஃபாவை சோதனை செய்தபோது அவருக்கு இரட்டை கருப்பைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

பின்னர் மூன்று குழந்தைகளும் தாயும் சிகிச்சைக்கு பிறகு நலமாக இருப்பதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் இதுபோன்ற சம்பவம் இதுவரை நடந்தது இல்லை என்றும் இப்போதுதான் முதல்முதலாக பார்க்கிறோம் என தெரிவித்துள்ளனர்.