குறுகிய வளைவில் அதிவேகம்! டெம்போ டிரைவரால் உயிரை பறிகொடுத்த 3 அப்பாவிகள்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர்கள் சம்பத் குமார்-கமலம் பேபி.


இவர்கள் ஆம்னி வேனில் கமலம் பேபி -யின் சகோதரியான ஜோதியின் கால் முறிவிற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள கோவை-க்குச் சென்றிருந்தனர்.ஆம்னி வேனை ஓட்டியவர்-வேலுச்சாமி.

உடுமலை-பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுங்கம் என்ற இடத்தில் சாலை வளைவில் எதிர்பாராத விதமாக வந்த டெம்போ நேருக்கு நேர் மோதியது.டெம்போவை ஓட்டியவர் ஆனந்த் குமார்.

இதில் வேலுச்சாமி, சம்பத் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கமலம் பேபி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஜோதி படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டெம்போ வின் ஓட்டுனர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.இரு வாகனங்களும் அந்த குறுகிய சாலையில் வேகமாக வந்ததால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.