தடுப்பை உடைத்துக் கொண்டு பிரைவேட் பஸ் மீது பாய்ந்த ஆம்னி பஸ்! டிரைவர் கண் அயர்ந்ததால் நொடியில் நேர்ந்த கோரம்! சேலம் பரபரப்பு!

சென்னையிலிருந்து சென்று கொண்டு இருந்த ஆம்னி பேருந்து இன்று அதிகாலை சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை அடுத்த தாழையூர் மேம்பாலம் பகுதியில் தனியார் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநனர் உயிரிழந்தார்.


சென்னையிலிருந்து நேற்று இரவு கேரளாவுக்கு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை அடுத்த தாழையூர் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தத வேளையில், தனியார் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விருதுநகர் மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநனர் பாஸ்கர் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். 

இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன் பகுதிகள் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய பயணிகள் அலறினார்கள். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து விபத்து குறித்து மகுடஞ்சாவடி காவதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கிய 48 பேரை மீட்டு அங்குள்ள சேலம் அரசு மருத்துவமணைக்கு, அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநனர் பாஸ்கரன் மருத்துவமணைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமணையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. விபத்தின் காரணமாக சிறு நேரம் மகுடஞ்சாவடி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.