என் புருசன் வாழ்ந்த வீட்ல தான் சாவேன்! கலெக்டரை நெகிழ வைத்த மூதாட்டி!

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கதிரவன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அந்தியூர் எண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த 87 வயது மூதாட்டி முத்தாயி அம்மாள் தனது மூத்த மகனுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார்.


ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கதிரவன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அந்தியூர் எண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த 87 வயது மூதாட்டி முத்தாயி அம்மாள் தனது மூத்த மகனுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார். மனுவில், அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் பகுதியில் வசித்து வரும் செல்லப்ப கவுண்டர் மனைவி எனவும், தனக்கு 3 மகன்கள் உள்ளனர் எனவும்  கணவர் கடந்த 4 வருடத்திற்கு முன்பு இறந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சொத்தை தனது மகன்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ளார், சொத்தை வாங்கிய பின்னர் மகன்கள் சரிவர கவனிக்கதாதாக குற்றம் சாட்டியவர், எண்ண மங்கலத்தில் உள்ள கணவர்  பூர்வீக வீட்டில் இருந்து வந்தவரை , அவரது இரு மகன்களும் வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர். வேறு போக்கிடம் இல்லாமல் அவதிப்படும் மூதாட்டி தன் கணவர் வாழ்ந்த வீட்டிலேயே தனது கடைசி நாட்களை வாழ  உதவி செய்யவும், தனது வாழ்வாதாரத்திற்காகவும் பணம் கொடுக்கும்படி மகன்களுக்கு அறிவுறுத்த கூறி மனு அளித்தார்.