பிரபல தமிழ் நடிகை சடலமாக இருப்பது போல் வீடியோவின் பரபரப்பு! உண்மை இது தான்..!

நடிகை ரேகா இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வருவதையடுத்து தான் நலமுடன் இருப்பதாக ரேகா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது வெறும் வதந்தி எனவும் அவர் கூறியுள்ளார்.


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரேகா. தமிழில் புன்னகை மன்னன், கடலோர கவிதைகள், எங்க ஊரு பாட்டுக்காரன், கோவில், காலம் மாறி போச்சு போன்ற ஏராளமான படங்களில் நடித்து தனது திறமையான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தற்போது இவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

அதில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் ஆகியோர் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவது போலவும் வீடியோ காட்சிகள் பதிவாக்கி அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்த நடிகை ரேகா செய்தியாளர்களிடம் தான் உயிருடன் இருப்பதாகவும் யாரோ நான் இறந்து விட்டதாக வதந்தி பரப்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்த வதந்தியை நம்பி எனது உறவினர்கள் பலர் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்கின்றனர். இந்நிலையில் இது தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளும் நண்பர்களிடம் ஆம் நான் இறந்து விட்டேன் தற்போது ஆவியாக பேசிக்கொண்டிருக்கிறேன் எனவும் கிண்டலடித்து வருகிறாராம். இந்நிலையில் சமூக வலைதளங்களில் தவறுதலாக வதந்தி பரப்பியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நடிகை ரேகா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.