தான் படித்த அரசுப் பள்ளிக்கு ஏசி வசதி! ஏழை மாணவர்களை நெகிழச் செய்த ஒரே ஒரு முன்னாள் மாணவர்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அரசுப் பள்ளியை மேம்படுத்த சொந்த செலவில் ஏ.சி. வசதி செய்துகொடுத்த முன்னாள் மாணவர் மக்களிடையே பாராட்டு பெற்றுள்ளார்.


நாகர்கோவிலை அடுத்த இடலாக்குடியில் அமைந்துள்ளளது செய்குத்தம்பி பாவலர் நினைவு தொடக்கப்பள்ளி. இப்பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் வருகையை அதிகப்படுத்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக உள்ள மாலிக் அகமது பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

சமையல் கலை வல்லுனரான மாலிக் பள்ளியின் முன்னாள் மாணவரும் ஆவார். தான் படித்த பள்ளி மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும்  பள்ளிகளை விட சிறப்பான பள்ளியாக விளங்க வேண்டும் என்ற ஆசையில் அவர் பள்ளிக்கு தனது சொந்தச் செலவில் ஏ.சி. வசதி செய்துகொடுத்துள்ளார். 

ஏழை மாணவர்கள் அதிகம் படிக்கும் இப்பள்ளியில், தனியார் பள்ளிக்கு நிகரான வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் அதிக மாணவர்கள் பள்ளியில் சேர வேண்டும் ஆர்வத்துடன் பள்ளிக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வரும் மாலிக் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.