டி.ஆர்.பாலுக்கு மட்டுமில்லீங்க நேருவுக்கும் ஆப்புத்தான்..! வயதானவர்களுக்கு லீவு கொடுக்கிறார்களாம்.

சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியைக் கொடுத்த திருச்சி நேருக்கு, தி.மு.க.வில் மாநிலப் பொறுப்பு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார் என்று தி.மு.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.


உண்மையில், அது டி.ஆர்.பாலுக்கும் நேருவுக்கும் வைத்த ஆப்பு என்கிறார்கள் திருச்சி தி.மு.க. தொண்டர்கள். என்னதான் விஷயம் என்று விசாரித்தோம். ‘‘சமீபகாலமாகவே டெல்லி விவகாரத்தை டி.ஆர்.பாலு சரிவர கையாளவில்லை என்ற கோபம் ஸ்டாலினுக்கு இருக்கிறது. அதனால் அவருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவரது பதவி பறிக்கப்பட்டது. 

அதேபோன்று நேருக்கு மாவட்ட அரசியலில்தான் ஆர்வம் அதிகம். அதனால் அங்கு உதயநிதியின் நண்பரான மகேஸ் பொய்யாமொழியால் கால் பதிக்கவே முடியவில்லை. ஆகவே, நேரு அங்கேயே இருந்தால் மகேஸ்க்கு வாய்ப்பு கிடைக்காது என்பதாலே, சென்னைக்கு வரவழைக்கும் வகையில் மாநில பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள்.

கட்சிப் பொறுப்பில் இருக்கும் வயதானவர்களுக்கு எல்லாம் மாநிலப் பொறுப்பு கொடுத்துவிட்டு, இளையவர்களை மாவட்ட அரசியலில் இறக்குங்கள் என்பது பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையாம்.

இதே போன்று மாவட்ட அரசியலில் இருக்கும் இன்னும் பல பெரிய தலைகளும் கட்சியின் மாநில பொறுப்புக்கு அழைக்கப்பட இருக்கிறார்களாம்.