திடீர் மாரடைப்பு! டெபாஷிட் பணம் ரூ.80 லட்சத்தை தர மறுத்த வங்கி! பரிதாபமாக பலியான முதியவர்! அதிர்ச்சி சம்பவம்!

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான வங்கியில் இருந்து அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் ஒரு முதியவர் இறந்தே போன சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.


மகாராஷ்டிரம், டெல்லி, குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி. இதில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களுக்கு உழைப்பால் கிடைத்த பணத்தை சேமித்து வைத்துள்ளனர். ஆனால் ஒரு சில பெரிய தலைகளின் தலையிட்டால் இந்த வங்கியில் கடன் வழங்கியது மூலம் சுமார் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது.

இந்த ஊழல் வெளியில் தெரியவர மோசடி தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வங்கியின் செயல்பாடுகளை முடக்கி வைத்துள்ளது. கடந்த வாரம் முதல் நாள் ஒன்றுக்கு 50,000 ரூபாய் பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுகளை தளர்த்தி இருந்தது. 

இந்நிலையில் மும்பையை சேர்ந்த முரளிதர் என்ற முதியவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்க பல லட்சம் ரூபாய் தேவைப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் அவரது மகன் பணம் எடுக்க பஞ்சாப், மகாராஷ்டிரா வங்கிக்கு சென்றுள்ளார்.

ஆனால் அவ்வளவு பணம் எடுக்க முடியாது என்று வங்கி ஊழியர்கள் கைவிரித்துவிட்டனர். கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை இந்த ஒரு வங்கியை மட்டுமே நம்பி 80 லட்சம் ரூபாய் வரை சேமித்து வைத்தும் கடைசியில் தன்னுடைய தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் முதியவர் முரளிதர்.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது என்னதான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஒரே வங்கியை நம்பி பணத்தை முதலீடு செய்யக்கூடாது 2, 3 வங்கியில் பணம் சேமித்து வைத்திருந்தால் இதுபோன்ற இன்னல்கள் வரும்போது சமாளித்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.