தஞ்சையில் பயங்கரம்! மோடிக்கு ஓட்டு கேட்ட முதியவரை அடித்தே கொலை செய்த இளைஞர்!

எம்.ஜி.ஆர்., மோடி படங்களுடன் பா.ஜ.க.வுக்கு வாக்கு கேட்ட முதியவரைக் கொன்ற ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தஞ்சையை அடுத்த ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜ். இவர் இங்குள்ள கால்நடைப் பண்ணை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். இவர் பா.ஜ.க. ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் இவர்  பிரதமர் மோடி படத்தை மாட்டிக்கொண்டும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் படங்களை சட்டையில் குத்திக்கொண்டும் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தார். 

ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே நேற்று இரவு கோவிந்த ராஜ் தனி நபராக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த் கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த ஓட்டுநரான கோபிநாத், மோடி உங்களுக்கு என்ன செய்தார் என்றும் எதற்காக மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறீர்கள் என கேட்டதாகவும் அதனைத்த் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

வாக்குவாதம் முற்றியதையடுத்து கோவிந்தராஜை கோபிநாத் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் கோபிநாத்தை மீட்டு அவரது வீட்டில் கொண்டு போய் விட்ட நிலையில் திடீர் நெஞ்சுவலி எற்பட்டு மயக்கமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பான கோவிந்தராஜின் மகள் புகாரின் பேரில் ஓட்டுநர் கோபிநாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.