சாகும் தருவாயில் மனைவியை நண்பனிடம் ஒப்படைத்த நபர்! 21 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த நெகிழ வைக்கும் செயல்!

தன்னுடைய மனைவியை மணந்து கொள்ளுமாறு இறக்கும் தருவாயில் நண்பன் சொன்னதை 21 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றி உள்ளார் ஒரு முதியவர்.


கேரள மாநிலம் திரிச்சூரில் உள்ள முதியோர் இல்லத்தில் சமீபத்தில் 65 வயது மூதாட்டி லட்சுமி அம்மாள் சேர்க்கப்பட்டார். அதே சமயம் சாலையில் மயங்கிக் கிடந்த கோச்சானியன் என்ற முதியவரை மீட்டு சமூக ஆர்வலர்கள் அதே முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். அப்போதுதான் தெரிந்தது இவர்கள் இருவருமே 21 ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்தவர்கள் என்று. லட்சுமி அம்மாள் என்பவரிடம் சமையல் உதவியாளராக வேலை பார்த்து வந்தவர் கோச்சானியன்.

அப்போதே லட்சுமி அம்மாளின் கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். அப்போது கோச்சானியனிடம் நான் இறந்த பிறகு நீதான் என் மனைவியை பார்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். பின்னர் இறந்துவிட்டார். நாளடைவில் இவர்கள் இருவருக்கும் பிரியம் ஏற்பட்டுள்ளது.

காலப்போக்கில் இருவரும் பிரிந்துள்ளனர். தற்போது இவர்களின் உணர்ச்சிப்பூர்வமான கதை தெரியவர முதியோர் இல்ல நிர்வாகிகள் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து முதியோர இல்ல நிர்வாகி ஜெயக்குமார் தெரிவித்தது என்னவென்றால், முதியோர் இல்லத்தில் திருமணம் நடைபெற்றால் எதிர்ப்பு வந்தாலும் வரும் என்பதால் மாநிலத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்ல நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியபிறகு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.

இதுகுறித்து லட்சுமி அம்மாள், கோச்சானியன் தெரிவிக்கையில் எங்கள் விருப்பத்தை நினைவாக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியை தெரிவிப்பதாக கூறினர். மேலும் வரும் 30ம் தேதி முதியோர் இல்லத்தில் திருமணம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.