2 ஆண் 1 பெண் என 3 பிள்ளைகள் இருந்தும் கடைசி காலத்தில் கவனிக்க யாரும் இல்லை! முதிய தம்பதி எடுத்த மனதை உலுக்கும் முடிவு!

கோவை மாவட்டத்தில் வயோதிக மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் அவரது கணவரும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அவர்களது பாசத்தை உலகம் பேச வைத்துள்ளது.


கோவை மாவட்டம் இருகூரில் வசித்த 75 வயதான கிருஷ்ணன்-சாரதா  எனும் வயோதிக தம்பதியான இவர்கள் சாலையோரத்தில் கூழ் விற்பனை செய்து அன்னாடம் வயிற்றை கழுவி வந்தனர். கிருஷ்ணன்-சாரதா தம்பதிக்கு 2 ஆண் மற்றும் 1 பெண் என மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

பிள்ளைகள் அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியாக தனிக் குடித்தனம் சென்று விட்ட நிலையில் பெற்றோரை யார் பார்த்துக் கொள்வது என்ற ஈகோவில் கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர். வயோதிக் தம்பதிக்க கடந் பிரச்சனை ஒரு புறம் இருக்க பிள்ளைகளால் தனித்து விடப்பட்ட காரணத்தால் விரக்தியில் காணப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சாரதா மாயமாகி விட்டார். சாரதா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சாரதாவை போலீசார் தேடிவந்தனர். அப்போது ஒரு வீட்டின் பாழடைந்த கிணற்றில் வயதான பெண்மணியின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் உதவியுடன் சென்ற கிருஷ்ணன் கிணற்றில் சடலமாக இருப்பது தன்னுடைய மனைவிதான் என அடையாளம் காட்டினார். அபபோது சற்றும் எதிர்பாராத நேரத்தில் அதே கிணற்றில் குதித்தார் கிருஷ்ணன். கிருஷ்ணனின் செயலை சற்றும் எதிர்பாரத அக்கம் பக்கத்தினர் போலீசார் அனைவரும் உடடினயாக அவரை மீட்க முயற்சித்தனர்.

ஆனால் அவரை மீட்பதற்குள் உயிர் அவரை விட்டு பிரிந்தது. பின்னர் சாரதா மற்றும் கிருஷ்ணன் இருவரின் உடலை மீட்டுள்ளனர். பாறையில் தலை அடிபட்டு விழுந்ததில், கிருஷ்ணன் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர் தகவல் அறிந்து வந்த பிள்ளைகள் தாய், தந்தை இருவரும் சடலமாக இருப்பதை பார்த்து கதறி அழுத்தனர். வாழும்போது வாய்க்கு சோறு போடாத மகன்களால் நிறைய பெற்றோருக்கு சீக்கிரமே வாய்க்கரிசி போடும் நிலை ஏற்பட்டு விடுகிறது.