எண்ணெய் கப்பல்கள் மீது குண்டு மழை! போர் பதற்றம்! ஓமன் வளைகுடாவில் என்ன நடக்கிறது?

ஓமன் வளைகுடாவில் சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே சர்வதேச எண்ணெய் வர்த்தகம் தொடர்பாக கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை நார்வே நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்றும், சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான ஒரு எண்ணெய் கப்பலும் ஒன்றன் பின் ஒன்றாக, ஓமன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்தன.

அப்போது, திடீரென 2 கப்பல்கள் மீதும் மர்மமான முறையில் சிலர் குண்டுவீசி தாக்குதல் நடத்தினர். இதில், 2  கப்பல்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின. உடனே அவற்றின் ஊழியர்கள் 44 பேரும் கடலில் குதித்தனர். அவர்களை ஈரான் கடற்படை காப்பாற்றியுள்ளது. 

இதில், சிங்கப்பூர் கப்பலில் ஜப்பான் நாட்டிற்கான சரக்குகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி சிங்கப்பூர், ஜப்பான் நாடுகள் தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளன. ஜப்பான் பிரதமர் ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.