அடிக்கடி குமட்டல் வருகிறதா? இதோ எளிய மருத்துவம்!!

ஒருசிலருக்கு எந்த காரணமும் இல்லாமல் அடிக்கடி குமட்டல் வரும். ஒருசில வாடையை நுகர்ந்தால், ஒருசில விஷயங்களைப் பார்த்தால் குமட்டல் உணர்வு வரலாம். அப்படிப்பட்ட சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.


சாப்பிட்ட உணவு சரியான அளவுக்கு செரிமானம் ஆகவில்லை என்றாலும், இதுதவிர  வயிற்று புண், ஒவ்வாமை, காய்ச்சல் போன்ற உடல்நலக் கோளாறு இருந்தாலும் குமட்டல் வரலாம். இதைத் தொடர்ந்து வாந்தியும் வரலாம்.  குமட்டலும் வாந்தியும் ஏற்படுகிறது

குமட்டலுக்கு மிக எளிமையான அதே நேரம் வலிமையான மருந்து என்றால், அது எலுமிச்சைதான். எலுமிச்சை சாறு எடுத்து அதில் தேன் ஊற்றி குடித்துவந்தால் குமட்டல் நின்றுவிடும் அதேபோன்று கறிவேப்பிலையை தண்ணீரில் வேகவைத்து, அத்துடன் சுக்கு, சீர்கம் கலந்து, அந்த நீரைக் குடித்தாலும் குமட்டலுக்குத் தீர்வு கிடைக்கும்.

இஞ்சி சாறு எடுத்து தேன் ஊற்றி சாப்பிட்டாலும் உடனடி நிவாரணம் கிடைக்கும். இதுபோன்ற இயற்கை மருந்துகளை பிரச்னை இருக்கும்போது மட்டும் குடிக்காமல், வாரம் ஒரு நாள் குடித்துவந்தால் குமட்டலுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.