மாமனாரின் தலையை துண்டாக்கி போலீஸ் ஸ்டேசனுக்கு எடுத்துச் சென்ற மருமகன்! அதிர வைக்கும் காரணம்!

சம்பல்பூர்: உறங்கிக் கொண்டிருந்த உறவினரின் தலையை துண்டித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொலையுண்ட நபர் தனது வீட்டின் முன்பு, கொசு வலை கட்டி, அதற்குள் படுத்து உறங்கியுள்ளார். அப்போது, அவரது மருமகன் உறவினர், தலையை தனியாக வெட்டியெடுத்துள்ளார். அந்த தலையை அப்படியே எடுத்துக் கொண்டு அவர் தலைமறைவாகிவிட்டார்.

காலையில் விடிந்ததும் அங்கு வந்த உறவினர்கள் இதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போலீசாருக்கு, அவர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், திடீரென கொலையாளி, தான் வெட்டியெடுத்துச் சென்ற தலையுடன், போலீஸ் நிலையத்திற்கே நேரில் வந்து சரணடைந்துள்ளார்.

பின்னர், அவரை கொலை வழக்குப் பதிந்து, போலீசார் கைது செய்தனர். கொலையுண்ட நபருக்கு 55 வயது என்றும், சொத்து தகராறு அல்லது முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.