மரத்தில் கூடு! வனத்திற்குள் வாழ்க்கை! வைரலாகும் விசித்திர மனிதர்!

ஒடிசா மாநிலத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனப்பகுதிகளில் இருக்கும் காட்டு யானைகள் அடிக்கடி மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு வந்து குடியிருப்புகளை நாசம் செய்து செல்கின்றனர்.


இந்நிலையில் வனத்தை ஒட்டிய பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இந்நிலையில் விவசாயி ஒருவர் தனது வீட்டை விட்டுவிட்டு மரத்தின் மேலே பறவைகள் கட்டுவதுபோல கூடுகட்டி அதில் வாழ்ந்து வருகிறார்.

ஒடிசா மாநிலம் கியோஞ்ஹர் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வனத்தில் இருக்கும் காட்டு யானைகள் அடிக்கடி தங்கள் குடியிருப்புக்குள் வந்து வீடு மற்றும் பயிர்களை நாசம் செய்து செல்கின்றன, என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வனத்தை ஒட்டிய நிலையில் வீடு கட்டி வசித்து வந்த விவசாயி ஒருவர் காட்டு யானைகள் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தனது வீட்டை தாக்கி அழித்து விட்டதாகவும் இந்நிலையில் யானைகளுக்கு பயந்து மரத்தில் கூடுகட்டி பறவை போல் தன் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அரசு சார்பில் தமக்கு வீடு கட்டி தருமாறும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள மாவட்ட வனத்துறையினர் பாதிக்கப்பட்ட நபருக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப் பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க தனி குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கிராம மக்களின் பாதுகாப்பிற்காக அப்பகுதிகளில் புதிதாக வேலிகள் அமைக்கப்படும் எனவும் யானைகள் கிராமங்களுக்குள் வராமல் தடுக்க ஆங்காங்கே வனத்துறையினர் நியமிக்கப்படுவார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.