காவல் அதிகாரியால் பலாத்காரம்! முதலமைச்சரின் வீட்டுக்கு வந்த இளம் பெண்! பரபரப்பு காரணம்!

காவலர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நீதி கேட்டு முதலமைச்சரின் வீட்டு வாசற் படி ஏறியுள்ளார் ஒடிசா மாநில பெண்.


ஒடிசா மாநிலம் மயுர்பஞ்ச் மாவட்டம் கப்திபாடா பகுதியில் திருமணம் ஆன பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் காவல்துறையை சேர்ந்த ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி புவனேஸ்வரில் நவின் பட்நாயக் இல்லத்திற்கு சென்று நீதி கேட்டு மனு அளித்துள்ளார். 

கப்திபாடா காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் சுவந்த் பெஹாரா மே 12ம் தேதி அதிகாலை தன்னுடை வீட்டிற்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கோடைக்காலம் என்பதால் காற்று வருவதற்காக வீட்டின் கதவை திறந்து வைத்து உறங்கிக் கொண்டிருந்ததாக குறிப்பிட்ட அவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்து தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக தெரிவித்தார்.

உடனே தான் சத்தம் போட்டதால் குடும்ப உறுப்பினர்கள் வந்ததும் அவர் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தபோது கிரில் கேட்டில் அடிபட்டு மயக்கம் அடைந்தார். இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தவுடன் போலீசார் வந்து அவரை மீட்டு சென்றதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார் பெண்.

ஆனால் பின்னர் மீண்டும் காவல்நிலையத்தில் இருந்து வந்த போலீசார் எந்த காரணமும் இல்லாமல் எனது குடும்ப உறுப்பினர்களை காவல் நிலையம் அழைத்து சென்று சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார் அந்தப் பெண். இந்த சம்பவத்தில் காவல் உயர் அதிகாரிகளிடம் நியாயம் கிடைக்காது என்பதால் முதல்வரின் வீட்டிற்கே வந்து மனு அளித்ததாக குறிப்பிட்ட அவர் இங்கும் நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என வேதனையுடன் தெரிவித்தார் அந்த திருமணமான பெண்.

வேலியே பயிரை மேய்ந்த கதை தெரியுமா உங்களுக்கு… மேயாமலேயே தண்டனை அனுபவிக்க போகிறது அந்த வேலி…