உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்த கள்ளக் காதல் ஜோடி அடித்தே கொலை!

உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்த கள்ளக்காதல் ஜோடி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசாவில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள பலாசூர் பகுதிக்கு உள்பட்ட துர்காதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் சந்திரா சாஹூ. இவரது மனைவி லஷ்மி பிரியா சாஹூ (32).

 

இவர்கள் 2 பேரும், சொந்த ஊரைவிட்டு, அருகில் உள்ள சகாதேவ்குண்டா என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதில், கைலாஷ்க்கு வேலை எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. அதேசமயம், லஷ்மி பிரியா தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

 

லஷ்மிக்கு, கள்ளக்காதல் ஏதேனும் இருக்கலாம் என்று, கைலாஷ்க்கு வெகு நாளாக சந்தேகம் இருந்துள்ளதுலஷ்மியை கையும் களவுமாக பிடிக்க, கைலாஷ் காத்திருந்துள்ளார். இந்நிலையில், ரானிபட்னா பகுதியில் உள்ள ஒரு வீட்டில், லஷ்மி தனது ஆண் நபருடன் செவ்வாயன்று இரவு படுக்கையில் இருந்துள்ளார்.

 

தனது மனைவியுடன் வேறு ஒருவன் உறவு கொண்டு கொண்டிருப்ப பார்த்து அதிர்ச்சி அடைந்த கைலாஷ், அவர்களை அடித்துக் கொல்ல முடிவு செய்தார். இதன்படி, இரும்பு ராடு ஒன்றை எடுத்து, அவர்கள் 2 பேரையும் மண்டையில் அடித்துக் கொன்றுவிட்டார் 

இதுபற்றி தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த போலீசார், கைலாஷை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். லஷ்மியுடன் படுத்திருந்த நபரின் பெயர் பிரதீப் குமார் டே (45 வயது) என்றும், அவர் கைலாஷின் சொந்த ஊரைச் சேர்ந்தவர்தான் என்றும், விசாரணையில் தெரியவந்துள்ளது.