கழிவறை சென்ற சிறுமி உடல் முழுவதும் காயம்! சடலத்திற்கு அருகே ஆணின் பேண்ட், செருப்பு! பதைபதைப்பை ஏற்படுத்தும் சம்பவம்!

சிறுநீர் கழிக்கச் சென்ற சிறுமி சடலமாக மீட்டெடுக்கப்பட்ட கோர சம்பவம் ஒடிசா அருகே நிகழ்ந்துள்ளது.


ஒடிசா மாநிலம் நபரங்கப்பூர் பகுதியில் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது திருவிழாவில் கலந்து கொண்ட குடும்பத்தினரின் 16 வயது மகள் சிறுநீர் கழிக்க அருகில் உள்ள பகுதிக்கு சென்றுள்ளார். 

பிறகு நீண்ட நேரமாகியும் சிறுமியை காணவில்லை. குடும்பத்தினரும் தனது மகள் திருவிழா நிகழ்ச்சிகளை கண்டு களித்துவிட்டு வீடு திரும்பி விடுவார் என எண்ணினர். இரவு 8 மணிக்கு மேலாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை.  

இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சிறுமியை தேடி வந்த காவல்துறையினர் அருகிலிருந்த புதருக்குள் சடலமாக மீட்டுள்ளனர்.  

சடலத்தின் அருகே ஆணின் கால் சட்டை மற்றும் செருப்பு கிடந்ததை போலீசார் ஆதாரமாக எடுத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

நேற்று இரவு நேரம் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.