நடுக்கடலில் ஆக்டோபஸ் மீனிடம் சிக்கிய நீச்சல் வீரர்! பிறகு நேர்ந்த அற்புதம்!

ஜாப்பான் நாட்டில் ஆழ்கடலில் நீந்திச்செல்லும் நபரை ஒரு ராட்சத ஆக்டோபஸ் தாக்கும் காட்சிகள் வெளியாகி பார்வையாளரின் கவனத்தைப் பெற்றுள்ளது.


ஜப்பான் நாட்டில் கமோவ் தீபகற்பத்திற்கு அருகே பெறப்பட்ட காட்சியில், பெரிய ஆக்டோபஸ் ஆழ்கடலில் மூழ்கி நீந்திவரும் சில நபர்களை தன்னை தாக்க வருவதாக நினைத்து பயந்து, தாமும் த்காக்க முற்ப்படும் காட்சிகள் கடந்த 3 ஆம் தேதி வெளியாகியது.

அந்த வீடியோவில் சிலர் கடலின் ஆழத்தில் நீந்தி செல்கின்றனர், அப்போது அங்கிருந்த ஆக்டோபஸ் அதில் ஒருவரது தொடத் மற்றும் இடுப்பு பகுதியை கவ்விய படி தொடர்ந்து தாக்க முயற்சிக்கிறது.

அதிலும் அந்த நபர் தொடர்ந்து நீந்தி முன் செல்கிறார், பின்னர் கை நழுவி அவரது காலை பிடித்து நிறுத்தப்பார்க்கிறது. இந்த ஆவேசமான தாக்குதலும், அதற்கு தப்பி நீந்திச்செலும் நபரையும் பின்னால் வரும் மற்றொரு நபர் பின்னிருந்து வீடியோ பதிவு செய்கிறார்.

நேஷனல் ஜியோகிராஃபிக் விவரிக்கையில், பொதுவான ஆக்டோபஸ், அதன் தோலிலுள்ள நிறமி செல்கள் மற்றும் சிறப்பு தசைகள் ஆகியவற்றின் வலையமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம், "சுறாக்கள், ஈலிகள் மற்றும் டால்பின் போன்றவற்றிடம் இருந்து தப்பித்துக்கொள்ளுமாம்.

அதேப்போல தாக்க வரும் எதிரிகளின் பார்வையை திசைத்திருப்ப ஒரு கரு நிற மைப்போன்ற திரவத்தை வெளியிடுவதன் மூலமாக எதிராளியின் நுகர்வுத்திறனை மழுங்கச்செய்யும் எனவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து தாக்குவதற்கு முயற்சித்த ஆக்டோபஸ் பின்னர் பாறைகளுக்கு இடையே சென்று மறைந்து கொள்ளும் காட்சிகள் வெளியாகி பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது.